தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்

1 mins read
6adf2a5d-7ae6-403e-95b9-19ddc9f651fb
படம்: - பிக்சாபே

பஞ்சாப்: தெருநாய்க்கடியால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஒவ்வொரு பல் பதிவுக்கும் ரூ. 10,000 வீதம் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளிக்கப்படும்போது, தாமதமின்றி வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று காவல் துறைக்கும் நீதிமன்றம் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.

நாய்களால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையும், மனித உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதாக நூற்றுக்கும் அதிகமான வழக்குகள் பதிவாகின. அதைத்தொடர்ந்து நீதிமன்றம் விசாரணையைத் தொடங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த நிவாரணத் தொகையானது, அந்தந்த மாநில அரசுகளால் விபத்தால் ஏற்படும் உயிரிழப்பு அல்லது நிரந்தர உடற்குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானம் செய்யப்படவேண்டும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்