தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிரிக்கெட் இறுதிப் போட்டியைக் காணஅகமதாபாத்துக்கு மோடி வருவதாகத் தகவல்

1 mins read
a176733a-ebb1-4039-9bb4-c29e9c572eec
2023 மார்ச் 9ஆம் தேதி அகமதாபாத் நகருக்கு கிரிக்கெட் போட்டியைக் காண வந்த பிரதமர் மோடி, விராத் கோஹ்லி, அணித் தலைவர் ரோஹித் சர்மா உட்பட கிரிக்கெட் வீரர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

அகமதாபாத்: இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்த நிலையில், உலகக்கோப்பை இறுதிப்போட்டியைக் காண பிரதமர் மோடி நேரில் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி கலந்து கொள்ளவிருப்பதால் போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானத்திற்கு காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் 4ஆவது டெஸ்ட் போட்டியின்போது பிரதமர் மோடி அகமதாபாத்திற்கு வருகையளித்திருந்தார்.

அப்போது அவர், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா வீரர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அந்த வகையில், 19ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியைக் காண பிரதமர் மோடி வரலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் என்று நடிகர் ரஜினிகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்