தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுரங்க விபத்து: வேறொரு துளையிடும் இயந்திரத்துக்காகக் காத்திருக்கும் மீட்புப் பணியாளர்கள்

1 mins read
7f714e14-57fd-4c65-b1e9-741686e81c4c
நவம்பர் 12ஆம் தேதி சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் சிக்கிக்கொண்டோர் எண்ணிக்கையை, அதிகாரிகள் 41ஆக அறிவித்துள்ளனர். - படம்: ராய்ட்டர்ஸ்

சில்க்ராயா: உத்தராகண்டில் இடிந்து விழுந்த சுரங்கப் பாதைக் கட்டுமானத்தில் தொழிலாளர்கள் சிக்கி கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், துளையிடும் இயந்திரம் சேதமடைந்ததால் புதிய இயந்திரத்துக்காக மீட்புப் பணியாளர்கள் காத்திருக்கின்றனர்.

முன்னதாக, இடிபாடுகளுக்குள் 40 பேர் சிக்கியிருப்பதாக நம்பப்பட்டது. ஆனால், மேலும் ஒருவர் உள்ளே சிக்கியிருப்பதாக பேரிடர் நிர்வாக அலுவலகம் கூறியுள்ளது.

சிக்கியுள்ள தொழிலாளர்கள் 41 பேரும் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

நவம்பர் 17ஆம் தேதி, மீட்புப் பணியாளர்கள் துளையிடும் இயந்திரத்தை மீண்டும் இயக்க முனைந்தபோது, பெரிய அளவில் விரிசல் ஒலி கேட்டதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டன.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரிலிருந்து மற்றோர் இயந்திரம் விமானம் மூலம் தருவிக்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்