பாஜக வேட்பாளர் கார் மோதி காங்கிரஸ் தொண்டர் உயிரிழப்பு: ம.பி.யில் பரபரப்பு

பாஜக வேட்பாளர் கார் மோதி காங்கிரஸ் தொண்டர் உயிரிழப்பு: ம.பி.யில் பரபரப்பு

1 mins read
95a17c55-df59-499c-8af8-e14426e16a51
மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் பாஜக வேட்பாளர் அரவிந்த் பட்டேரியாவால் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

போபால்: மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின்போது சத்தர்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட மோதலில் பாஜக வேட்பாளரின் கார் மோதி காங்கிரஸ் தொண்டர் உயிரிழந்தார். அதனையடுத்து உயிரிழந்த காங்கிரஸ் தொண்டரின் சடலத்துடன் கஜுராஹோ காவல்நிலையத்தின் அருகே திக்விஜய் சிங் போராட்டத்தில் ஈடுபட்டார்.

மத்தியப் பிரதேசத்தில் 230 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நவம்.17ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே கடுமையான இருமுனைப் போட்டி நிலவியது.

இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் பாஜக வேட்பாளர் அரவிந்த் பட்டேரியாவால் காங்கிரஸ் தொண்டர் சல்மான் கான் கார் ஏற்றிக் கொல்லப்பட்டதாக புகார் கூறப்பட்டது. அதனையடுத்து உயிரிழந்த சல்மான் கானின் சடலத்தை எடுத்துக் கொண்டு கஜுராஹோ காவல் நிலையத்திற்கு சனிக்கிழமை வந்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் சனிக்கிழமை (நவம்.18) முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

முன்னதாக, வெள்ளிக்கிழமை பாஜக வேட்பாளர் அரவிந்த் பட்டேரியா மற்றும் சில பாஜகவினர் மீது ஐபிசி 302, 307, 147, 149, 294 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய காவல் கண்காணிப்பாளர் அமித் சங்கி, “தேர்தல் மோதலில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கஜுராஹோ காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து 20 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்