தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருமண விருந்தில் ரசகுல்லா தீர்ந்ததால் சண்டை; அறுவர் காயம்

1 mins read
578f5da2-5a12-4026-a22d-f707e7c139c5
திருமண நிகழ்ச்சியில் ‘ரசகுல்லா’ இனிப்புக்காக இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. - படம்: இந்திய ஊடகம்

லக்னோ: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், சம்ஷாபாத் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

அதனையொட்டி அப்பகுதி மக்களுக்கும் உறவினருக்கும் இரவு உணவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களுக்குப் பல்வேறு உணவு வகைகள், ரசகுல்லா உட்பட பல இனிப்பு வகைகள் பரிமாறப்பட்டன.

அப்போது, ரசகுல்லா தீர்ந்துவிட்டதால் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த இருதரப்பினர் இடையே வாக்குவாதம் மூண்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் அது கைகலப்பாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இந்தச் சம்பவத்தில் அறுவருக்குக் காயம் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்