அதிகாரிகள்மீது பாலை ஊற்றியப் பெண்

அதிகாரிகள்மீது பாலை ஊற்றியப் பெண்

1 mins read
8e1d1270-b7b4-4d57-b387-f9d5de21adc9
நடைபாதையில் இருந்த கடையை அகற்ற வந்த நகராட்சி அதிகாரிகள் மீது பாத்திரத்தில் உள்ள பாலை வீசியெறிந்த கடை உரிமையாளர். - படம்: இந்திய ஊடகம்

ஆலப்புழா: இந்தியாவின் கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தின் செங்கன்னூர் - வெள்ளவூர் சந்திப்பில் இருக்கும் நடைபாதையில் பெண் ஒருவர் தேநீர் கடை நடத்தி வந்தார்.

நடைபாதையில் கடை இருப்பதால், அதனை அகற்ற வேண்டும் என அதிகாரிகள் அவரிடம் கூறினர்.

இதனால் கோபமடைந்த அந்தப் பெண், தேநீர் தயாரிப்பதற்காக பாத்திரத்தில் வைத்திருந்த பாலை அதிகாரிகள் மீது வீசினார். துணை காவல் அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் மீது பாலை ஊற்றியதாகவும் பால் சூடாக இல்லாததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்பெண்ணை அதிகாரி சமாதானப்படுத்த முயன்றபோதும், அதைக் காதில் வாங்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதத்திற்குப் பிறகு மாநகராட்சி அதிகாரிகள் கடையை அகற்றினர்.

குறிப்புச் சொற்கள்