தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த மூவர் கைது

1 mins read
fa966490-b569-4870-9c63-6f3ec49afdf9
சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் சிறுவன் உட்பட குற்றவாளிகள் மூவரைக் காவல்துறை கைது செய்தது. - படம்: இந்திய ஊடகம்

ஜெய்ப்பூர்: இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், தீட்வானா மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த ஓர் ஆடவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த ஆடவர் அச்சிறுமியைக் கைப்பேசியில் அழைத்து வீட்டிற்கு வெளியே வரும்படி கூறினார்.

வீட்டைவிட்டு வெளியே வந்த சிறுமியை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு காரில் அந்த ஆடவர் அழைத்துச் சென்றார். அங்கு ஒரு சிறுவன் உட்பட இருவர் கூட்டுச் சேர்ந்து அச்சிறுமியைக் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தாள். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை சிறுமியைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் உள்பட மூவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்