மும்பை: மாகாராஷ்டிர மாநிலத்தின் தானே மாவட்டத்தைச் சேர்ந்த மும்ப்ரா பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தில் பழைய சாமான்கள் விற்கும் கடை ஒன்று செயல்பட்டு வந்தது.
அந்தக் கடையில், பழைய பொருள்களோடு ஒரு எரிவாயு உருளையும் வைக்கப்பட்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் திடீரென அந்த எரிவாயு உருளை வெடித்துச் சிதறி தீப்பற்றியது.
இந்தச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் படுகாயமடைந்து உயிரிழந்தனர். மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தை காவல்துறையினர் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.