திருப்பதி வந்து சேர்ந்த பிரதமர் மோடி

1 mins read
4b9a5a68-a004-44e3-8943-7e31093daf74
பிரதமர் மோடி திருமலையில் ஒரு நாள் தங்கி ஏழுமலையானை தரிசிக்கிறார். - படம்: ராய்ட்டர்ஸ்

திருப்பதி: பிரதமர் மோடி திங்கட்கிழமை காலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்.

இதற்காக ஞாயிற்றுக் கிழமை மாலை விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்து சேர்ந்தார்.

விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஆளுநர் அப்துல் நசீர், மாவட்ட ஆட்சியர் வெங்கட் ரமணா ரெட்டி, காவல்துறைக் கண்காணிப்பாளர் பரமேஸ்வர் ரெட்டி, அமைச்சர்கள் மற்றும் பலர் வரவேற்றனர்.

பின்னர் அவர் சாலை வழியாக திருமலைக்குச் செல்கிறார்.

திருமலையில் உள்ள வி.ஐ.பி விருந்தினர் மாளிகையில் அவர் இரவு தங்குகிறார்.

திங்கட்கிழமை (நவம்பர் 27) காலை வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை அவர் தரிசனம் செய்கிறார்.

தரிசனம் முடிந்து ரேணிகுண்டா விமான நிலையம் வழியாக பிரதமர் மோடி விமானம் மூலம் மீண்டும் டெல்லி புறப்பட்டு செல்கிறார்

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மத்திய, மாநில உளவுத்துறை காவல்துறையினர் ரேணிகுண்டா விமான நிலையத்திலும் ரேணிகுண்டாவில் இருந்து திருமலை செல்லும் சாலைகள் முழுவதும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர்.

மேலும் பிரதமர் மோடி தங்கும் முக்கிய விருந்தினர் மாளிகை முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது.

ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து திருமலை வரை 3,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்