தெலுங்கானாவில் தமிழ்ப் பள்ளிகள் மூடல்: பல லட்சம் குழந்தைகள் பாதிப்பு

தெலுங்கானாவில் தமிழ்ப் பள்ளிகள் மூடல்: பல லட்சம் குழந்தைகள் பாதிப்பு

1 mins read
93be9855-27d1-48f5-a145-bd511de3827a
தங்களின் குழந்தைகள் வேறுவழியின்றி இந்தி அல்லது சமஸ்கிருதம் எடுத்து படிக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளதாக தெலுங்கானா தமிழர்கள் கூறுகின்றனர். - படம்: இந்திய ஊடகம்

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் பகுதிகளில் இருந்த 20க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் மூடப்பட்டது அந்த மாநிலத்தில் உள்ள தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில்கூட, தமிழ்ப் பாடம் நீக்கப்பட்டதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் பகுதிகளில் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வசித்து வருகின்றனர். தெலுங்கானாவில் தெலுங்கு மொழிப் பாடம் கட்டாயம் என்கிற சட்டத்தால் தமிழர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழில் எழுதவும் படிக்கவும் வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் ஆசிரியர்களை நியமித்துவிட்டு, பாடநூல்களை வழங்காமலும் போதிய ஒத்துழைப்பு அளிக்காமலும் அந்தப் பள்ளிகள் மூடப்பட்டதாக தெலுங்கானா தமிழர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தங்களின் குழந்தைகள் வேறுவழியின்றி இந்தி அல்லது சமஸ்கிருதம் எடுத்து படிக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

குஜராத்தில் தமிழ்ப் பள்ளிகள் மூடப்பட்ட போதே, தமிழர்கள் அதற்கு எதிராக குரலெழுப்பினர். அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் மூடப்பட்ட தமிழ்ப் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு கடிதம் எழுதினார்.

குறிப்புச் சொற்கள்