தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காணொளி: மேலிருந்து நீர் கசிந்ததால் ஏர் இந்தியா விமானப் பயணிகள் அவதி

1 mins read
b1ceb03f-2a46-4ebc-b652-64ce6a8f96a4
பயணிகளின் இருக்கைக்கு மேலே கைப்பை வைக்கும் பகுதியிலிருந்து நீர் ஒழுகியது. - காணொளிப்படம்

புதுடெல்லி: அண்மையில் டெல்லியிலிருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் மேற்கூரையிலிருந்து நீர் ஒழுகியதால் பயணிகள் சிரமத்திற்குள்ளான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

விமானத்தில் கைப்பை வைக்கும் பகுதியிலிருந்து நீர் ஒழுகி, பயணிகளின் இருக்கைகள்மீது சொட்டுவதைக் காணொளி காட்டுகிறது.

நீர்க்கசிவிற்கான காரணம் வெளியிடப்படவில்லை.

இதனையடுத்து, இணையவாசிகள் பலரும் ஏர் இந்தியா நிறுவனத்தை எள்ளி நகையாடும் வகையில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

ஒரு சிலர், தொழில்நுட்பக் கோளாறாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ள நிலையில், வேறு சிலர் இது ஏர் இந்தியா நிறுவனத்தின் பராமரிப்பு, சேவைக் குறைபாட்டைக் காட்டுவதாக உள்ளது என்று தங்களது மனக்குறையை வெளிப்படுத்தியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்