நியூயார்க்: நியூயார்க்கில் காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுவைக் கொல்ல முயற்சி செய்ததாக இந்தியர் ஒருவர் கைதாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் இந்தியாவின் உளவுத் துறைக்குத் தொடர்பு இருக்கலாம் என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்காவில், சீக்கிய காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுவைக் கொலை செய்ய முயற்சி நடந்ததாகவும் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரத்தில் நியூயார்க் நகர காவல்துறையினர் நிகில் குப்தா என்ற இந்தியரைக் கைது செய்தனர்.
காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுவை அவர் கொல்ல முயன்றதாகக் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை நாடு கடத்தவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே அமெரிக்காவின் குற்றச்சாட்டு கவலைக்குரிய விவகாரம் என்று இந்தியா கூறியுள்ளது.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு மாறாக இந்தச் செயல் உள்ளது என்று அது குறிப்பிட்டது.