அமெரிக்காவின் புதிய வேலை அனுமதித் திட்டத்தால் இந்தியர்களுக்கு நன்மை

அமெரிக்காவின் புதிய வேலை அனுமதித் திட்டத்தால் இந்தியர்களுக்கு நன்மை

1 mins read
85e49111-f995-4ef0-bc14-2df9411af89c
படம்: - இணையம்

வாஷிங்டன்: அமெரிக்கா, ‘எச்-1பி’ எனப்படும் வேலை அனுமதி தொடர்பான விசாவின் சில பிரிவுகளை உள்நாட்டிலேயே புதுப்பிக்கும் முன்னோடித் திட்டத்தை இந்த மாதம் (டிசம்பர்) தொடங்குகிறது.

இந்நடவடிக்கையால், இந்தியாவைச் சேர்ந்த தொழில்நுட்பத் திறனாளர்கள் பலர் நன்மையடைவர் என்று கூறப்படுகிறது.

ஜூன் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தின்போது இந்த முன்னோடித் திட்டம் குறித்து வெள்ளை மாளிகை அறிவித்திருந்தது.

இந்த முன்னோடித் திட்டம் பெரும்பாலும் இந்தியாவிற்காகவே மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

டிசம்பர் முதல் மூன்று மாதங்களுக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சு, தற்போது அமெரிக்காவில் இருக்கும் 20,000 வெளிநாட்டினருக்கு விசா வழங்கும். அவர்களில் பெரும்பாலோர் இந்திய நாட்டவர். பின்னர் அந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்