புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் குளிா்காலக் கூட்டத்தொடரையொட்டி டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியுள்ளது.
குளிா்கால கூட்டத்தொடா் 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கூட்டத்தொடரில் பல முக்கிய சட்ட முன்வரைவுகள் கொண்டுவரப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆளும் பாஜக அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

