தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

1 mins read
8a7dc67e-8df7-4d61-bc29-02cbf6153261
அரிஹல் என்னும் இடத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதி ஒருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். - இபிஏ

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படையினரும் காஷ்மீர் காவல்துறையினரும் இணைந்து நடத்தும் இந்த நடவடிக்கையின்போது புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. அரிஹல் என்னும் இடத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதையடுத்து அரிஹல் பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தனர். இதில் பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். அரிஹல் பகுதியில் மேலும் பல பயங்கரவாதிகள் ஒளிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்