கார்கே சாடல்: பாஜக அரசு ரயில்வே துறையை அழித்து வருகிறது

கார்கே சாடல்: பாஜக அரசு ரயில்வே துறையை அழித்து வருகிறது

1 mins read
8c3960d6-8abb-4ac2-9169-bb45fdf73227
அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே. - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, இந்தியாவின் ரயில்வே துறையை அழித்து வருவதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

“ரயில் சேவையில், பொதுமக்களின் பாதுகாப்பு, வசதி, நிவாரணம் ஆகியவற்றில் பாஜக அரசாங்கம் கொஞ்சம்கூட கவனம் செலுத்தவில்லை,” என்று கார்கே தெரிவித்துள்ளார்.

“பாலசோர் விபத்து போன்ற மிகப்பெரிய விபத்துக்கு பிறகும், கவாச் பாதுகாப்புக் கருவி ஒரு கிலோ மீட்டருக்குக்கூட இணைக்கப்படவில்லை.

“மேலும், ரயிலில் சாதாரண வகுப்புக் கட்டணம்கூட அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, படுக்கை வசதிகொண்ட சாதாரண வகுப்புக் கட்டணம் குறைக்கப்பட வேண்டும்.

“வெறும் கைத்தட்டல்களைப் பெறுவதற்காக மட்டும் வெள்ளை வண்ணம் பூசப்பட்ட ரயில்களைத் தொடக்கி வைப்பதில் பிரதமர் மோடி கவனம் செலுத்தி வருகிறார்,” என்று கார்கே கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்