தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திமிங்கல எச்சம் கடத்திய மூவர் கைது

1 mins read
9bc9cbaf-e284-4238-90fb-3a3dfdf54085
காவல்துறையிடம் சிக்காமல் இருக்க ஐயப்ப பக்தர்கள் வேடத்தில் வந்த கடத்தல்காரர்கள். - படம்: இந்திய ஊடகம்

கொச்சி: திருச்சூரில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபடும்போது திமிங்கல எச்சம் கடத்தி வந்த மூன்று பேர் அதிகாரிகளிடம் சிக்கினர்.

பிடிபட்டவர்களிடம் 5 கிலோ எடையுள்ள திமிங்கல எச்சம் இருந்தது. அதனை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பதற்காகக் கடத்திச் சென்றதாக விசாரணையில் தெரியவந்தது.

பிடிபட்ட திமிங்கல எச்சத்தின் மதிப்பு ரூ.5 கோடி என்று கூறப்படுகிறது. திமிங்கல எச்சத்தை கடத்தியவர்கள், காவல்துறையிடம் சிக்காமல் இருக்க ஐயப்ப பக்தர்கள் வேடத்தில் காரில் வந்திருக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்