காங்கிரசின் தெலுங்கானா வெற்றிக்கு சுனில் கனுகோலுவின் வியூகமே காரணம்

1 mins read
9c5d168a-710e-4611-9f00-3ba85fe23fb2
சுனில் கனுகோலு. - கோப்புப்படம்
multi-img1 of 2

புதுடெல்லி: இந்திய தேசிய காங்கிரஸ் தெலுங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெற்றது. அங்கு நடந்துவந்த கே.சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சி ஆட்சியை அகற்றியுள்ளது. அதற்கு தேர்தல் நிபுணர் சுனில் கனுகோலு வகுத்த தேர்தல் வியூகங்களே காரணம் என்று கூறப்படுகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவரை பிஆர்எஸ் கட்சியே ஆட்சியில் இருந்து வந்தது. இந்த நிலையில், 2023 தேர்தலில் காங்கிரஸ், சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சிக்கு முடிவுகட்டியுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ள வெற்றி கர்நாடக மாநிலத் தேர்தல் முடிவுகளைப் போலவே உள்ளது. இதனால், கனுகோலின் தேர்தல் வியூகங்கள் மூலமாகவே தெலுங்கானாவிலும் காங்கிரஸ் வெற்றி கனியை பறித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

சுனில் கனுகோலு: கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் சுனில் கனுகோலு. இந்தியாவில் தேர்தல் வியூகங்களை வகுப்பதில் பிரபலமானவர்களில் இவர் ஒருவர். காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் வெற்றிபெற தேர்தல் பிரசார திட்டங்களை உருவாக்கி கொடுத்தவர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனக்காக பணியாற்றும்படி சந்திரசேகர ராவ் விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்தார் கனுகோலு. பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக பாடுபடப்போவதாக தெரிவித்து அக்கட்சியில் இணைந்தார்.

ராகுல் காந்தியின் நேரடி ஆலோசகராகவும் அறியப்படும் கனுகோலு பாரத் ஜோடோ யாத்திரையில் இவரின் பங்கு முக்கியமானதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்