மம்தா: தேர்தல் முடிவுகள் சந்தேகத்தையும் ஆச்சரியத்தையும் தந்துள்ளது

2 mins read
0af66e5f-8bc8-418a-a477-1caf3c75d6e0
நடந்து முடிந்த நான்கு மாநிலத் தேர்தல்களின் முடிவுகளில் மக்களின் நாடித்துடிப்பை உணர்வதில் மோசமான தவறு நடந்திருக்கிறது என்று கூறியுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. - கோப்புப்படம்: ஊடகம்

லக்னோ: நடந்து முடிந்த தேர்தல்களில் 4 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் விநோதமான முறையிலும் அதிர்ச்சி அளிக்கும் வகையிலும் உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடந்த மொத்த சூழலை வைத்துப் பார்க்கும்போது, இந்த விநோதமான முடிவுகளால் மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுபோன்ற தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்வது கடினம்.

புதிரான இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து தீவிரமான சிந்தனையும், தீர்வும் தேவைப்படுகின்றன. மக்களின் நாடித்துடிப்பை உணர்வதில் மோசமான தவறு நடந்திருக்கிறது.

இந்தத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியினர் கடுமையாக உழைத்தனர். ஆனால் தற்போது வந்துள்ள புதிரான முடிவால் அவர்கள் ஏமாற்றம் அடைய தேவையில்லை.

பாபா சாகேப் அம்பேத்கரிடம் இருந்து ஊக்கம் பெற்று நாம் முன்னோக்கி நகர்வோம்.

நான்கு மாநிலத் தேர்தல் முடிவுகளையொட்டி, பகுஜன் சமாஜ் கட்சியின் அகில இந்திய அளவிலான கூட்டம் லக்னோவில் டிசம்பர் 10ஆம் தேதி நடத்தப்படுகிறது. அதில் தற்போதைய கள நிலவரம் குறித்தும், வருகிற மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும் விதம் குறித்தும் விவாதிக்கப்படும் என்று தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

தோல்விக்கு இண்டியா கூட்டணியும் காரணம்

முன்னதாக மம்தா பானர்ஜி, தான் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் கட்சியை விமர்சித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டமன்றத்தில் இது குறித்து உரையாற்றிய அவர், காங்கிரஸ் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ராஜஸ்தானிலும் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், இண்டியா கூட்டணிக் கட்சிகளால் சில வாக்குகள் பிரிந்துவிட்டன என்று சுட்டிக்காட்டி, இதுதான் உண்மை என்றார்.

நாங்கள் தொகுதிப் பங்கீடு ஏற்பாட்டைச் சொன்னோம் என்றும் வாக்குகள் பிரிந்ததால் தான் அவர்கள் தோற்றார்கள் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேலும், சித்தாந்தத்துடன், ஒரு வியூகத்தையும் கொண்டிருக்க வேண்டும் என்றும் தொகுதிப் பங்கீடு சரியாக இருந்தால், 2024 இல் பாஜக ஆட்சிக்கு வராது என்றும் மம்தா பானர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்