கோல்கத்தா: மேற்கு வங்காள மாநிலம் கோல்கத்தாவைச் சேர்ந்தவர் சமீர் கான். இவர் தனது தாயின் கைப்பேசியில் இருந்த ஜவேரியா கானும், 21, என்ற பெண்ணின் படத்தைப் பார்த்ததுமே காதல் வயப்பட்டார். சமீர் கானின் தாய்வழி உறவினரான அந்தப் பெண், பாகிஸ்தானின் கராச்சி நகரத்தைச் சேர்ந்தவர்.
சமீர் கானின் காதலை ஜவேரியா கானுமும் ஏற்றுக்கொண்டார். இவர்களது திருமணத்துக்கு இருவீட்டாரும் பச்சைக்கொடி காட்டினர். அதையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டிலேயே இந்த ஜோடியின் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. ஆனால் இருவரும் நேரில் சந்திக்க 5½ ஆண்டுகள் ஆகிவிட்டன. ஜவேரியா கானுமின் ‘விசா’ கோரிக்கை, இருமுறை இந்திய அரசால் நிராகரிக்கப்பட்டது.
விடாமுயற்சியின் பலனாக தற்போது ஜவேரியா கானுமுக்கு தற்போது 45 நாள் ‘விசா’ கிடைத்துள்ளது. அதையடுத்து ஜவேரியா கானும் வாகா எல்லை வழியாக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசுக்கு நேற்று வந்தார். அவரை வாகா எல்லையில் வருங்கால கணவர் சமீர் கானும், அவரது தந்தையும் வரவேற்றனர். இவர்களின் திருமணம் ஜனவரி 6ஆம் தேதி நடக்க உள்ளது. திட்டமிடப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் மூலம் கிடைத்த காதலரை மணக்க இந்தியாவிலிருந்து அஞ்சு, 34, என்பவர் கடந்த வாரம் பாகிஸ்தான் சென்றார். இரு நாட்டுக்கும் இடையில் எல்லை கடந்த காதல் தொடருகிறது.

