ஹைதராபாத்: தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் பாஜக பலத்த பின்னடைவைச் சந்தித்துள்ளது. பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பல இடங்களில் வைப்புத்தொகையை (டெபாசிட்) இழந்துள்ளன.
பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தெலுங்கானாவில் ஜன சேனா கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இந்த 8 தொகுதிகளிலுமே ஜன சேனா கட்சி வைப்புத்தொகையை இழந்துள்ளது.
ஆந்திராவின் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரசின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராகச் செயல்பட்டு வரும் பவன் கல்யாணுக்கு இது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஆந்திரா சட்டமன்றத் தேர்தலிலும் இந்தத் தோல்வி பிரதிபலிக்குமா என்ற விவாதங்களும் எழுந்துள்ளன.

