விவோ நிறுவனம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

விவோ நிறுவனம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

1 mins read
d6e3f432-18ef-44e9-92c3-caec377e14c4
இந்தியா, அகமதாபாத்திலுள்ள விவோ நிறுவனம். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

புதுடில்லி: இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கோடிக்கணக்கான பணம் சீனாவுக்கு அனுப்பப்பட்டதாக சீன கைப்பேசி தயாரிப்பு நிறுவனமான விவோவின் இந்தியக் கிளையான விவோ - இந்தியா மீது (vivo - india) அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

கடந்தாண்டு, இந்த நிறுவனங்களில் நடத்திய சோதனையில், இந்தியாவில் வரி கட்டுவதை தவிர்க்க விவோ நிறுவனம் சீனாவிற்கு ரூ.62,476 கோடியை சட்ட விரோதமாக அனுப்பியதாக அமலாக்கத்துறை கூறியிருந்தது. இதில் பல சீனர்களும், இந்திய நிறுவனங்களும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தது. 

இதுதொடர்பாக, லாவா இன்டர்நேஷனல் மொபைல் நிறுவனத்தின் இயக்குநர் ஹரி ஓம் ராய், சீனாவைச் சேர்ந்த அலியாஸ் ஆன்ட்ரூ மற்றும் இரண்டு பட்டயக் கணக்காளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் இந்தியாவின் பொருளாதார இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக அமலாக்கத்துறை தனது விசாரணை ஆவணங்களில் தெரிவித்துள்ளது

குறிப்புச் சொற்கள்