வெங்காய ஏற்றுமதிக்குத் தடை: விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

புதுடெல்லி: விலை உயர்வைக் கட்டுப்படுத்த 2024 மார்ச் மாதம் வரை வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கணிசமாக உயா்ந்து வருகிறது. விலை உயா்வைக் கட்டுப்படுத்தவும் தட்டுப்பாடு ஏற்படாமல் மக்களுக்கு வெங்காயம் தாராளமாகக் கிடைப்பதை உறுதியாக்கவும் அரசு திட்டம் வகுத்தது.

சாமானிய மக்கள் வெங்காய விலை உயா்வால் பாதிக்கப்படாமல் தடுக்கும் நடவடிக்கையாக 2024 மார்ச் மாதம் வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் அறிவித்து உள்ளது.

மேலும், பிற நாடுகளிடமிருந்து வரும் கோரிக்கையின் அடிப்படையில் ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படும் என வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்துள்ளது

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக வெங்காய வரத்து குறைந்தது.

மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காயம் விளைவிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள விவசாயிகளிடமிருந்து வெங்காயத்தை கொள்முதல் செய்து மத்திய அரசு தொகுப்பில் இருந்து மாநிலங்களுக்கு விடுவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலை கணிசமாக அதிகரித்து உள்ளது.

அதனால் சில மாதங்களாக வெங்காயம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.

வெங்காயம் விலையை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக வெங்காயத்துக்குத் தட்டுப்பாடு ஏற்படாதிருக்க அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். இருப்பினும் வெங்காயத்தின் விலைமட்டும் குறைந்தபாடில்லை.

சில்லறை விலையில் டெல்லியில் ஒரு கிலோ ரூ.55 முதல் ரூ.60 வரை விற்பனையாகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு கிலோ வெங்காயம் ரூ.130க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கு முன்பு வெங்காயத்தின் விலை ரூ.25 முதல் ரூ.30 வரை இருந்து வந்த நிலையில் தற்போது இருமடங்காக உயர்ந்துள்ளது. எனவே வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் கொண்டுவரவும், உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின் விநியோகத்தை அதிகரிக்கவும் மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.

அப்போது, வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு 40% வரி விதித்திருந்தது. இருப்பினும் வெங்காயத்தின் விலை கட்டுக்குள் வரவில்லை. சில வணிகர்கள் வெங்காயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்வதே இந்த விலை உயர்வுக்கு காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது.

இந்நிலையில், 2024ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலும் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும் புவிசார் குறியீடு பெற்ற பெங்களுரு ரோஸ் வெங்காயத்தின் ஏற்றுமதிக்கு வரிவிலக்கு தொடரும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் நடப்பு ஆண்டில் 3 லட்சம் டன் வெங்காயத்தை கையிருப்பு வைக்க மத்திய அரசுமுடிவு செய்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!