தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு குடும்பத்துடன் வந்து வழிபட்ட லாலு பிரசாத்

1 mins read
a6d3ce7d-6619-4f43-9e02-49016ca370f3
மனைவி, மகன் உள்பட குடும்பத்தினரோடு திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்த லாலு பிரசாத் யாதவ். - படம்: ஊடகம்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தோடு சனிக்கிழமை வழிபாடு மேற்கொண்டார்.

2004 முதல் 2009 வரையில் ரயில்வே துறை அமைச்சராக லாலு பிரசாத் இருந்தபோது, ரயில்வே துறையில் பணி நியமனம் தொடர்பாக லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட லாலு, அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி ஆகியோரை கடந்த அக்டோபர் மாதம் டெல்லி நீதிமன்றம் பிணையில் விடுவித்தது.

இந்த நிலையில், லாலு பிரசாத் யாதவ் தனது மனைவி, மகன் உள்பட குடும்பத்தினரோடு சனிக்கிழமை (9-12-2023) திருப்பதிக்கு சென்று வழிபாடு செய்தனர்.

“திருமண நாளான இன்று எனது குடும்பத்தினருடன் திருப்பதி பாலாஜி கோயிலில் வணங்கி, தரிசனம் செய்ததன் மூலம் வேங்கடேசப் பெருமாளின் ஆற்றலையும், ஆசீர்வாதத்தையும் பெற்றேன். நாங்கள் மாநிலத்தின் மக்கள் மகிழ்ச்சி, அமைதி செழிப்புடனும் நலமாக வாழவேண்டும் என வழிபாடு செய்தோம்,” என அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்