புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா

புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா

படம்: இணையம்

09 Dec 2023 - 9:16 pm

1 mins read

திருமணம் என்ற புனிதமான உறவில் இரு மனங்கள் இணைந்து, இறுதி மூச்சுவரை ஒன்றாக வாழக் கடப்பாடு கொள்வதைத் தான் பலரும் அறிந்திருப்போம்.

ஆனால், அண்மையில் இணையத்தில் பரவலாக வலம்வரும் காணொளி ஒன்றில், மணமகன் வழக்கத்திற்கு மாறாக நடந்துகொண்டுள்ளதைக் காண முடிகிறது.

ஒன்றல்ல, இரண்டல்ல, நான்கு மணப்பெண்களை ஒரே நேரத்தில் கைப்பிடித்தார் மாப்பிள்ளை.

மணமகன் ஒவ்வொரு மணப்பெண்ணுடனும் தீயை வலம்வந்ததை அடுத்து மணப்பெண்கள் தங்களின் கணவரது பாதத்தைத் தொட்டு ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர்.

இந்தக் காணொளியைக் காணும் இணையவாசிகள் அனுதாபம் தெரிவித்தும் நகைச்சுவையாகப் பதிவிட்டும் வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
மணப்பெண்திருமணம்