லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் குழந்தை உட்பட எட்டு பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
பரெய்லி மாவட்டத்தில் உள்ள நைனிடால் நெடுஞ்சாலையில் சனிக்கிழமை இரவு இந்த மோசமான விபத்து நிகழ்ந்தது.
அதிவேகமாகச் சென்றதாகக் கூறப்படும் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த டிரக்குடன் மோதியது.
இதில் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்ட கார் தீப்பிடித்து எரிந்தது.
காரில் உள்ளே இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டனர். திடீரென கார் தீப்பற்றி எரிந்ததில் அந்த காரில் இருந்த குழந்தை உட்பட எட்டு பேர் தீயில் கருகி மாண்டனர். இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

