தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோழிக்கோடு - துபாய் கப்பல் சேவை

1 mins read
4fa68a0b-3882-499d-96ea-c964ca945fbb
படம்: - தமிழ் முரசு

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் கோழிக்கோடு அருகே உள்ள பேப்பூர் பகுதியில் இருந்து கொச்சி வழியாக கப்பல் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக கடல்சார் வாரியத் தலைவர் என்.எஸ்.பிள்ளை கூறுகையில், “இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் ஆதரவு அளித்தால், கப்பல் சேவையை விரைவில் தொடங்க முடியும். இதற்கான ஏலக்குத்தகை ஜனவரி மாதத்தில் கோரப்படும். தனியார் தொழில் முனைவோர் மற்றும் மத்திய அரசின் பங்களிப்புடன் உள்ள நிறுவனங்கள் இந்த ஏலக் குத்தகையில் பங்கேற்கலாம்,” என்றார்.

ஆயிரம் முதல் இரண்டாயிரம் பயணிகள் செல்லக்கூடிய வகையில் கப்பலை இயக்க பரிசீலித்து வருவதாகவும், பயண நாள்கள் 5 நாட்களாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கொச்சி வழியாக இந்த கப்பல் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்