தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜம்மு - காஷ்மீரில் 2024 செப்டம்பருக்குள் தேர்தல்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

1 mins read
a23c91ae-e161-4582-9240-6ac0bed8771f
படம்: - தமிழ் முரசு

ஜம்மு - காஷ்மீரில் அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவின்கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது.

இந்த சிறப்புப் பிரிவை 2019-ஆம் ஆண்டு நீக்கிய மத்திய அரசு, ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

இதற்கு எதிராக இந்திய உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 ஐந்து நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. வழக்ககு விசாரணை முடிவுற்ற நிலையில் டிசம்பர் 11ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது செல்லும் என்று தலைமை நீதிபதி கூறினார்.

மேலும், ஜம்மு - காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுத்து, 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் சட்டமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்