தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பனிமலை உச்சியில் பணிபுரியும் பெண்

1 mins read
3a4325a6-6b23-40d2-8c7e-3db5efb67f2c
சியாச்சின் மலைப் பகுதியில் முதல் பெண் மருத்துவ அதிகாரியாக பணியேற்றிருக்குப் பாத்திமா வாசிம். - படம்: இந்திய ஊடகம்

இந்தியாவிலேயே மிக பெரியதும், உலகின் இரண்டாவது மிக பெரிய பனிமலைப்பகுதியான சியாச்சினில் முதல் பெண் மருத்துவ அதிகாரியாக “சியாச்சின் போராளிகள்” குழுவைச் சேர்ந்த கேப்டன் ஃபாத்திமா வாசிம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கோட்டிற்கு அருகே உள்ள, அதிக உயரமுடைய செங்குத்தான பனிமலைகளை உள்ளடக்கிய இப்பகுதி உலகிலேயே உயரமான போர்ப் பகுதியாகவும் கருதப்படுகிறது.

இங்கு இந்திய ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடுங்குளிருடன் மிக கடினமான வானிலையில் பணியாற்ற தேவையான தீவிரப் பயிற்சிகளை சியாச்சின் போர்ப் பயிற்சிப் பள்ளியில் கேப்டன் ஃபாத்திமா வாசிம் வெற்றிகரமாக நிறைவு செய்ததையடுத்து அவருக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்