தம்பி மகன் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி. மாநில தலைநகா் லக்னோவில் நடந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய அளவிலான நிா்வாகிகள் கூட்டத்தில் அவர் இதனை அறிவித்தார்.
இருபத்தெட்டு வயதாகும் ஆகாஷ் ஆனந்த் தற்போது அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக உள்ளாா்.
நாட்டில் உத்தர பிரதேசம், உத்தரகண்டை தவிர, வேறு எங்கெல்லாம் கட்சி பலவீனமாக உள்ளதோ, அங்கெல்லாம் கட்சியை வலுப்படுத்தும் பொறுப்பு ஆகாஷ் ஆனந்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தாா்.