வெடிகுண்டு மிரட்டல்: நள்ளிரவில் ஆளுநர் மாளிகையில் சோதனை

வெடிகுண்டு மிரட்டல்: நள்ளிரவில் ஆளுநர் மாளிகையில் சோதனை

1 mins read
c8312f68-07fa-4c64-96f1-08de54230e2c
படம்: - தமிழ் முரசு

பெங்களூரு: வெடிகுண்டு மிரட்டல் காரணமாக கர்நாடகாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நள்ளிரவு வேளையில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பெங்களூரில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு திங்கட்கிழமை அன்று இரவு வந்த தொலைபேசி அழைப்பில் மர்மநபர் ஒருவர் பேசினார்.

அப்போது, ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பின்னர் தொலைபேசி அழைப்பைத் துண்டித்து விட்டார். இதனால் காவல்துறை வட்டாரங்களில் பரபரப்பு நிலவியது.

மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்ட நிலையில், வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். எனினும் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. தொலைபேசி மிரட்டல் வெறும் புரளி என உறுதியானது.

அண்மையில்தான் பெங்களூரில் ஏழு பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.

குறிப்புச் சொற்கள்