நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப இஸ்ரோ திட்டம்

1 mins read
a3c8c018-57ae-4be9-b99c-359644d9c1cb
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் சோம்நாத் - படம்: இந்திய ஊடகம்

கொச்சி: விண்வெளி ஆராய்ச்சியில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் அடுத்தக்கட்டத்தை கையில் எடுக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

2 முதல் 3 இந்திய விண்வெளி வீரர்கள் கொண்ட குழுவினரை குறைந்த தூரத்தில் உள்ள புவிவட்ட சுற்றுப்பாதைக்கு அனுப்பி மீண்டும் 3 நாட்களுக்குப் பிறகு பாதுகாப்பாக அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

2025 ஆம் ஆண்டு இந்த திட்டத்தைக் கட்டம்கட்டமாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2040ஆம் ஆண்டுக்குள் முதல் முறையாக இந்திய விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்துடன் இஸ்ரோ முழு வீச்சில் செயல்படுகிறது.

குறிப்புச் சொற்கள்