மாவோயிஸ்டுகள் தாக்குதலில் ஆயுதப் படை வீரர் உயிரிழப்பு

மாவோயிஸ்டுகள் தாக்குதலில் ஆயுதப் படை வீரர் உயிரிழப்பு

1 mins read
ab227047-5a72-4ca2-a635-2b8db1da19c6
படம்: - ஊடகம்
Google News Preferred Icon

தந்தேவாடா: சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள ஆம்தாய் கதி இரும்புத் தாது சுரங்கம் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு மாவோயிஸ்ட்கள் தேடுதல் வேட்டையில் அம்மாநில ஆயுதப்படை வீரர்கள் (சிஏஎஃப்) ஈடுபட்டனர். புதன்கிழமை காலை 11 மணியளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது மாவோயிஸ்டுகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.

இதில் சிஏஎஃப் வீரர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு வீரர் காயமடைந்தார். இறந்த வீரரின் பெயர் கமலேஷ் சாஹு. உயிரிழந்தவர் சம்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர். காயமடைந்த மற்றொரு வீரர் வினய் குமார் சாஹு. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குறிப்புச் சொற்கள்
ஆயுதப்படைஉயிரிழப்பு