14 நாடுகளின் உயரிய விருதுகளைப் பெற்ற பிரதமர் மோடி

14 நாடுகளின் உயரிய விருதுகளைப் பெற்ற பிரதமர் மோடி

1 mins read
cfbab46a-a50b-456a-8363-3cea126a7978
மோடி. - படம்: ஊடகம்

புதுடெல்லி: கடந்த 2014 முதல், 14 நாடுகளின் உயரிய விருதுகளை, பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.

இத்தகவலை மத்திய வெளியுறவு துணை அமைச்சர் முரளிதரன் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

பிரதமராக பதவியேற்றது முதல், இதுவரை, ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ரஷ்யா, மாலத்தீவு, பஹ்ரைன், அமெரிக்கா, பூட்டான், ஃபிஜி, எகிப்து, பப்புவா நியூ கினியா உள்ளிட்ட நாடுகளின் உயரிய விருதுகளை பிரதமர் மோடி பெற்றுள்ளதாக, மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

“பிரதமர் மோடிக்கு உயரிய விருதுகளை வழங்குவது, இரு தரப்பு, வட்டார, உலக அளவில், அவரது அரசியல் திறன் மற்றும் தலைமைத்துவத்திற்கான தெளிவான அங்கீகாரமாகும்.

“மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழலுக்கான உயரிய விருதையும் இந்தியப் பிரதமர் பெற்றுள்ளார்,” என்றும் வெளியுறவு துணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்