ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தின் 14வது முதல்வராக பஜன்லால் ஷர்மா வெள்ளிக்கிழமையன்று பதவி ஏற்றார். முதல்வராக இவர் பதவி வகிப்பது இதுவே முதல்முறை.
ஜெய்ப்பூரில் உள்ள ஆல்பர்ட் ஹாலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உட்பட பேராளர்கள் பலர் முன்னிலையில் பஜன்லால் ஷர்மா பதவி ஏற்றுக்கொண்டார்.
பதவி ஏற்பு விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்,
பதவி ஏற்பு விழாவுக்கு முன்பு தமது பெற்றோருக்கு பஜன்லால் ஷர்மா பாத பூஜை செய்து மரியாதை செலுத்தி அவர்கள் ஆசிகளைப் பெற்றுக்கொண்டார்.
பதவி ஏற்பு நடைபெற்ற தினம் பஜன்லால் ஷர்மாவின் பிறந்தநாள் என்பதால் அவரது குடும்பத்தாருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரட்டிப்புக் கொண்டாட்டம்.
பஜன்லால் ஷர்மாவுக்கு 57 வயது.

