இந்தூர்: மத்தியப் பிரதேசத்தை விட்டு எங்கும் செல்லப்போவதில்லை என்று அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான் கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் அண்மையில் நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது.
230 தொகுதிகளில் 163 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது.
அதனைத் தொடர்ந்து சிவ்ராஜ் சிங்கிற்குப் பதிலாக மோகன் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, சிவ்ராஜ் சிங் முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.
கடந்த வியாழக்கிழமையன்று அவருக்குப் பிரியாவிடை அளிக்கப்பட்டது.
அப்போது அவரது பெண் ஆதரவாளர்கள் துக்கம் தாங்காமல் கதறி அழுதனர்.
இதைப் பார்த்து மனம் நெகிழ்ந்த 64 வயது சிவ்ராஜ் சிங் தாம் மத்தியப் பிரதேசத்தை விட்டு எங்கும் செல்லப்போவதில்லை என்று அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

