தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ராமர் கோயில் வடிவில் உருவாகியுள்ள வைர நெக்லஸ்

1 mins read
25fc3856-f3e8-4aed-a5ac-a1e238b2ad54
அயோத்தியில் உள்ள ராமர் கோயில் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள வைர நெக்லஸ். - படம்: ஊடகம்

மும்பை: சூரத் நகரில் ராமர் கோவில் வடிவிலான வைர நெக்லஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

பார்ப்பவர்கள் கண்களைக் கவரும் இந்த வைர நெக்லஸில் 5,000 அமெரிக்க வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த அணிகலனை உருவாக்க இரண்டு கிலோ வெள்ளி தேவைப்பட்டதாகவும் நாற்பது கலைஞர்களைக் கொண்டு 35 நாள்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் வணிக நோக்கத்தில் இந்த நெக்லஸ் உருவாக்கப்படவில்லை என்றும் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்குப் பரிசாக அளிக்கப்பட உள்ளது என்றும் சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரியான கவுசிக் தெரிவித்துள்ளார்.

இந்த வைர நெக்லஸ் தொடர்பான புகைப்படங்களும் காணொளியும் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டுவருகின்றன.

நெக்லஸ் மிக அழகாகவும் பிரமிப்பு ஏற்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளதாகப் பலரும் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்