தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒடிசாவில் கடும் குளிர், பனிக் காற்று

1 mins read
0b353923-5ffb-4110-b4f8-e969e60e94ce
படம்: - இந்திய ஊடகம்

புவனேஷ்வர்: ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் குளிர் காற்று வீசி வருவதாகவும் 14 இடங்களில் வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு குறைவாகப் பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தப் பருவத்தின் மிகக் குறைந்த வெப்பநிலை உதயகிரி பகுதியில் பதிவாகியுள்ளது. புல்பானி, சுதர்கர், கோராபுத், அங்குல் உள்ளிட்ட இடங்களில் மிகக் கடுமையான குளிரும் பனிக் காற்றும் வீசியது.

புவனேஷ்வர், கட்டக் பகுதிகளில் வழக்கத்தை விட 1 முதல் 1.9 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை குறைவாகப் பதிவாகியது. அடுத்த 4 முதல் 5 நாள்களுக்கு இரவு நேர வெப்பநிலையில் பெரிய மாற்றமிருக்காது என முன்னுரைக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு ஒன்றிரண்டு இடங்களில் நிகழலாம் என ஒடிசா வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்