புதுடெல்லி: அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதான மூதாட்டியிடம் அடையாளம் தெரியாத நபர்கள் வழிப்பறி செய்ய முயன்றபோது வாகனத்திலிருந்து அவர் கீழே விழுந்து அடிபட்டுள்ளார். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக வடக்கு டெல்லி பகுதி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம், பெருவிரைவு ரயில் நிலையத்துக்கு மின்சார ரிக்ஷாவில் கேசாங் டோர்ஜி என்கிற மூதாட்டி செல்லும்போது அவரிடமிருந்து கைப்பை திருடப்பட்டுள்ளது. இது குறித்து காவல் துறை துணை ஆணையர் மனோஜ் குமார் மீனா பேசும்போது, பாதிக்கப்பட்ட டோர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

