டைனோசர் முட்டைகளை ‘குலதேவதை’ என வழிபட்ட கிராமத்தினர்

போபால்: இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் தார் மாவட்ட கிராமம் ஒன்றில் விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட கற்களை அந்தக் கிராம மக்கள் ‘குலதேவதைகள்’ என்று வழிபட்டு வந்தனர்.

அந்தக் கற்களுக்கு தேங்காய் உடைத்து, பூசைகள் செய்து வழிபாடுகளும் நடத்தினர்.

‘காகட் பைரவ்’ அல்லது ‘பிலாட் பாபா’ என்று அழைக்கப்பட்ட அந்தக் ‘குலதேவதைகள்’ தங்கள் விவசாய நிலங்களையும் கால்நடைகளையும் இன்னல்களிலிருந்து காப்பாற்றும் என்பது அவர்களின் நம்பிக்கை.

மழைக்காலங்களில் ‘குலதேவதைகளுக்கு’ ஆடுகள் பலியிடப்பட்டதுண்டு.

இந்நிலையில், அந்தக் கிராமத்திற்குச் சென்ற வல்லுநர் குழு, கிராம மக்கள் வழிபட்ட கற்கள் மில்லியன் ஆண்டுகள் பழைமையான டைனோசர் முட்டைகள் என்பதைக் கண்டறிந்தது.

தார் மாவட்டத்தில் இதுவரை 250க்கு மேற்பட்ட டைனோசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மத்தியப் பிரதேசத்தின் நர்மதா பள்ளத்தாக்கு இருக்குமிடத்தில் மில்லியன்கணக்கான ஆண்டுகளுக்குமுன் பல டைனோசர்கள் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!