அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பொன்முடி வகித்த துறைகள் ஒதுக்கீடு: ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

1 mins read
3cebeaab-4908-4850-ab61-69ce8adf12e9
அமைச்சர் ராஜகண்ணப்பன் - படம்: தமிழக ஊடகம்

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொன்முடி வகித்து வந்த உயர் கல்வி உள்ளிட்ட துறையை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

பொன்முடி கவனித்து வந்த உயர் கல்வித் துறையை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யக் கோரி ஆளுநருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியிருந்தார்.

இதையடுத்து, பொன்முடி வகித்து வந்த துறைகளை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.

மேலும், அமைச்சர் ராஜகண்ணப்பன் வசம் இருந்த கதர், கிராமத்தொழில் துறை, அமைச்சர் ஆர்.காந்திக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கவும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்