ஆளுநரைத் திரும்பப் பெறுக: கேரள முதல்வர் கடிதம்

ஆளுநரைத் திரும்பப் பெறுக: கேரள முதல்வர் கடிதம்

1 mins read
8c58a201-2728-44ba-8c88-28eaac478a6b
பினராயி விஜயன். - படம்: ஊடகம்

திருவனந்தபுரம்: கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் பொறுப்பில்லாமலும் அரசியல் அமைப்பு நெறிமுறைகளை மீறி செயல்படுவதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டி உள்ளார்.

இதையடுத்து ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என அதிபர் திரௌபதி முர்முக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

“ஆளுநர் ஆரிப் முகம்மது கான் அரசியல் சாசனப் பணிகளை முறையாகச் செய்வதில்லை. அரசியலமைப்பு நெறிமுறைகளை அவர் அடிக்கடி மீறுவதால் அரசுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் சிரமங்கள் ஏற்படுகின்றன.

“மேலும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

“எனவே, ஆட்சிப் பணிகள் சுமூகமாக நடைபெற ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்,” என்று முதல்வர் பினராயி விஜயன் தமது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்