புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் நடப்பாண்டில் இதுவரை 52,191 வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் நடப்பாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை 49,191 வழக்குகள் பதிவாகி உள்ளன.
இந்நிலையில், இணையம் மூலம் வழக்குப் பதிவு செய்தல், காணொளி வசதி மூலம் நடத்தப்படும் விசாரணை, மின்னிலக்க ஆவணப்பதிவு ஆகிய நடைமுறைகள் காரணமாக வழக்குகளை விரைவாக விசாரிக்க முடிகிறது என்றும் இதனால் விரைவில் நீதி வழங்கப்படுகிறது என்றும் நீதித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

