புதுடெல்லி: டெல்லி உள்பட வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக அப்பகுதிகளில் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என காற்றின் தரம் குறித்து ஆராயும் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
பனிப்பொழிவு காரணமாக டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் 11 விமானங்களும், 3 உள்ளூர் விமானங்களும் தரையிறங்குவதில் தாமதம் ஆனது.
பனிமூட்டம் காரணமாக பல விமானங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. இதனால் இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.