பாஜகவின் வெற்றிக்காக காத்திருந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு காலணி அணிந்த தலைவர்

பாஜகவின் வெற்றிக்காக காத்திருந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு காலணி அணிந்த தலைவர்

1 mins read
689056cf-3edf-4456-b5d3-00a951fdfcc0
மத்தியப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராம்தாஸ் பூரி, இந்த மாநிலத்தில் பாஜக வெல்லும் வரை காலணி அணியப் போவதில்லை என்று 2017ல் சபதம் ஏற்றிருந்தார். இப்போது அந்த சபதத்தை முறித்துக் கொண்டார். முன்னாள் முதல்வர் சவுகான் முன்னிலையில் அவர் காலணி அணிந்துகொண்டார். - படம்: என்டிடிவி

போபால்: மத்தியப் பிரதேசத்தின் அனுப்பூர் மாவட்டத்தின் பாஜக தலைவராக ராம்தாஸ் பூரி உள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இவர் ஒரு சபதம் ஏற்றிருந்தார். அதாவது மத்தியப் பிரதேசத்தில் பாஜக வெற்றி பெறும்வரை காலணி அணியப் போவதில்லை என்பதுதான் அந்தச் சபதம்.

ஆனால், 2018ஆம் ஆண்டு பாஜக படுதோல்வியைத் தழுவியது. காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. எனவே, திரு ராம்தாஸ் பூரியால் காலணி அணிய முடியவில்லை. 2020ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர் பாஜக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. அப்போது அக்கட்சித் தலைவர் வலியுறுத்தியும் ராம்தாஸ் பூரி, காலணி அணிய மறுத்து விட்டார். 2023ஆம் ஆண்டுத் தேர்தலுக்காக காத்திருந்தார்.

இந்நிலையில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இந்தச் சூழலில், அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், அனுப்பூர் பகுதிக்குச் சென்று மக்களைச் சந்தித்தார். அப்போது அவரது முன்னிலையில் ராமதாஸ் பூரி மீண்டும் காலணியை அணிந்து கொண்டார்.

குறிப்புச் சொற்கள்