காந்தி நகர்: பெண்கள் அதிகாரம் பெறும் பயணத்தில் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
காந்தி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பாலின இடைவெளி என்ற பிளவை விரைவில் நிரப்ப வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டார்.
“50 விழுக்காடு மக்களைப் புறக்கணித்து எந்த நாடும் முன்னேற முடியாது.
“பெண்களின் பங்கேற்பு ஆண்களுக்கு நிகராக இருந்தால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணிசமாக அதிகரிக்கும் என அனைத்துலக ஆய்வுகளும் மதிப்பீடுகளும் எடுத்துக்காட்டுகின்றன,” என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறினார்.

