மூவர் மீது அமிலத் தாக்குதல்; ஆடவர் கைது

1 mins read
9ee4e71c-808f-466d-881c-c2942e1e4640
படம்: - பிக்சாபே

ஒடிசா மாநிலம் புல்பானியில் மூவர் மீது அமிலம் வீசி தாக்குதல் நடத்திய பிரமோத் சாஹு என்பவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சூரஜ் , அவரது நண்பர் பிரமோத் இருவர் மீதும் நடந்த அமிலத் தாக்குதலைத் தடுக்க வந்த சந்திர மோஹன்டி ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் குற்றவாளியைப் பிடித்து அடித்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். குற்றவாளியும் பலத்த காயங்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பழைய பகை காரணமாக இந்தத் தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். குற்றவாளி கடத்தல் பொருள்களை அப்பகுதி இளைஞர்களுக்கு விற்றுவந்ததாகவும், அதனை சூரஜ் தட்டிக் கேட்டதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்