குற்றப்பத்திரிகையில் பிரியங்கா பெயர்

குற்றப்பத்திரிகையில் பிரியங்கா பெயர்

1 mins read
b62d963b-cf2b-4bef-b72b-25e30add3a30
பிரியங்கா காந்தி - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

புதுடெல்லி: ஹரியானா நில பேர ஊழல் வழக்கில் காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி பெயரை குற்றப்பத்திரிகையில் அமலாக்கத்துறை முதன் முறையாக சோ்த்துள்ளது.

இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் அவருடைய கணவா் ராபா்ட் வதேராவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. கணவன்-மனைவி இருவரின் பெயரும் குற்றப்பத்திரிகையில் ஒன்றாக சோ்க்கப்பட்டிருப்பதும் இதுவே முதல்முறையாகும்.

கேரளாவை பூர்விகமாகக்கொண்ட தொழிலதிபரான சி.சி.தம்பி ரிதாபாத் அருகேயுள்ள அமீர்பூர் கிராமத்தில் 486 ஏக்கர் நிலத்தை சி.சி.தம்பி வாங்கினார். ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் அவர் 2005-2008ஆம் ஆண்டில் ஹரியானாவின் டெல்லியை சேர்ந்த எச்.எல். பாவா ரியல் எஸ்டேட் நிறுவனம் மூலம் அந்த இடத்தை வாங்கினார்.

அதேநிறுவனம் மூலம் 2005ல் அமீர்பூர் கிராமத்தில் பிரியங்கா காந்தி 5 ஏக்கர் விவசாய நிலத்தையும் அவர் கணவர் ராபர்ட் வதேரா 40 ஏக்கர் விவசாய நிலத்தையும் வாங்கினர்.

சி.சி.தம்பி நிலம் வாங்கியபோது சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதை அமலாக்கத் துறை கண்டுபிடித்தது. இதுதொடர்பாக தொழிலதிபர் சி.சி.தம்பி கடந்த 2010ல் கைது செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து ராபர்ட் வதேராவும் பிரியங்கா காந்தியும் ஹரியானாவின் அமீர்பூரில் தாங்கள் வாங்கிய நிலங்களை கடந்த 2010ல் எச்.எல். பாவா நிறுவனத்திடம் விற்பனை செய்தனர். இந்த நிலங்களை வாங்கியதிலும் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டி உள்ளது. இதுதொடர்பான வழக்கில் முன்னர் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் ராபர்ட் வதேராவின் பெயர் சேர்க்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்