397 மாவோயிஸ்டுகள் கைது

397 மாவோயிஸ்டுகள் கைது

1 mins read
fc932fa3-26f9-4b2d-9d13-c8f20dc35d6b
2020 ஜனவரி 1 முதல், மொத்தம் 74 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். 792 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. - கோப்புப் படம்

ராஞ்சி: இந்த ஆண்டு ஜார்க்கண்ட்டில் மொத்தம் 397 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர், 26 பேர் சரண் அடைந்துள்ளனர் என்று அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

தடை செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மாவோயிஸ்ட்) அமைப்பின் பகுதி குழு உறுப்பினர், பிராந்திய குழு உறுப்பினர், 5 ஜோனல் கமாண்டர்ஸ், 11 துணை ஜோனல் கமாண்டர்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.

இவர்களிடம் இருந்து 27 காவல்துறை ஆயுதங்கள் உள்பட 152 ஆயுதங்கள், 10,350 வெடிமருந்துகள், 244 மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் காவல்துறை குறிப்பிட்டது.

இவர்களின் தலைக்கு மொத்தமாக ரூ. 1.01 கோடி வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

2020 முதல் கடந்த 4 ஆண்டுகளில் 1,617 நக்ஸல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 74 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனர். பாதுகாப்புப் படையினருடனான மோதலில் 40 நக்ஸல்கள் கொல்லப்பட்டுள்ளனர். ரூ. 160.81 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்