கொச்சி: மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சுரேஷ்கோபி. அவர் கடந்த அக்டோபர் மாதம் கோழிக்கோட்டில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் தந்தபோது ஒரு பெண் செய்தியாளரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அப்பெண், காவல்துறையில் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி சுரேஷ்கோபி மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், தனது செயலுக்கு சுரேஷ் கோபி வருத்தம் தெரிவித்தார். இருப்பினும், புகாரின் அடிப்படையில் அவரை விசாரணைக்கு வருமாறு அதிகாரிகள் அழைப்பாணை அனுப்பினர். விசாரணைக்கு வந்த சுரேஷ் கோபிக்குப் பிணை வழங்கப்பட்டது.
இருப்பினும், இந்த வழக்கில் காவல்துறை தன்னைக் கைது செய்யாமல் இருப்பதற்கு கேரள உயர் நீதிமன்றத்தில் முன்பிணை கேட்டு சுரேஷ்கோபி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

